வழமை போலவே அன்றும் என் அம்மாவின் சுப்ரபாதத்துடனே தொடங்கியது என் பொழுது "தவமாய் தவமிருந்து தறுதலைய பெத்திருக்கிறேன்... எல்லோருக்கும் விடிஞ்சாலும் உனக்கு மட்டும் பொழுது விடியவே விடியாது " என்றவாறே மூடியிருந்த என் அறை ஜன்னல்களை திறந்து விட்டார், சோம்பலை முறித்தபடி ஜன்னல் வழியே எதிர் வீட்டைப் பார்த்தேன்.... எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு நிலா புன்னகைத்து மறைந்து போனது.
நிலவொன்று புன்னகைப்பதை அன்று தான்முதன் முதலில் பார்த்தேன் அன்றோடு மாறிப் போனது என் வாழ்க்கை ஜன்னலோரமே என் வாழ்க்கையானது காலை பல் தேய்ப்பது , சாப்பிடுவது , துங்குவது என என் பொழுதுகள் ஜன்னலோடு......... காலை பத்து மணிவரை வராத என் சூரியன் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எட்டிப் பார்த்தான் . அவளைப் பார்ப்பதர்க்ககவே விடிந்தன என் விடியல்கள், பல நாட்களாக வரப்படாத என் தலைக்குள் நுழைந்த சீப்பு தட்டுத் தடுமாறி முட்டி மோதி வெளிவந்தது, கரடியாய் கத்தினாலும் பல் விளக்கத பயல் தினமும் இரண்டு தடவைகள் குளிக்கிறானே என்ற அம்மாவின் அதிசயப் பார்வைகள்....எதோ ஓர் ஜந்தை பார்ப்பது போலவே பார்க்கும் அப்பாவின் கண்களிலும் ஆச்சர்யமே .... இவன் எப்படி இப்படி மாறினான் என்ற என் தங்கையின் குறு குறுப் பார்வைகள் , இவற்றை எல்லாம் தாண்டி நாட்கள் கூடதவம் இருக்கும் என்னவளின் ஒரவிழிப் பார்வைக்காக.
மெல்ல மெல்ல என் வீட்டுப் படியேறியது எதிர் வீட்டு நிலா, தேவதைகள் தரை மேலும் நடந்து வரும் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன் , என் தங்கையும் அவளும் நன்பிகளானார்கள் அதனால் தினமும் என் வீடு வரும் நிலா, அவள் வருகையை எதிர் பாத்து வாசலுக்கும் அறைக்கும் நடந்ததில் என் வீட்டின் நடுவே ஒரு பாதையே உருவாக்கி இருந்தது... என்னை பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்து தலை குனிவாள் எதிரே வந்த என்னை கண்டதும் அருகில் வந்தவள் " நீங்கதான் பாதியிலேயே படிப்பை விட்டிட்டிங்க என்று அருணா சொன்னாள் ஆனா நீங்க தினமும் ஜன்னலோரம் நின்று படிச்சுக்கொண்டிருக்கிரிங்க என்ன படிக்கிறிங்க? " எனக்கு படிப்பு என் மண்டைல ஏறல்ல என்றதை போட்டுக் கொடுத்த தங்கை மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது ஆனாலும் " சும்மா ஸ்டோரி புக்ஸ் " என்றேன் அசட்டு சிரிப்புடன் " ஒ அப்படியா சரி அருணா வந்த சொல்லிடுங்க" என்றவாறே மான்குட்டியாய் ஒட்டிப் போனாள் அவள் பின்னே குதித்துக் கொண்டு ஓடிய என் இதயத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்.
இனியும் காத்திருக்காமல் அவளிடம் என் காதலை கொட்டிவிடுவது என்று அவளிற்காய் அவள் வருகைக்கக்க காத்திருந்தேன் தெரு ஓரமாய் ... என்னைக் கண்டதும் ஓடிவந்தாள் " உங்களை வீட்டில தேடினேன் " ஆஹா அவளும் என்னைப் போலவே காதலை சொல்லத்தானோ தேடி வந்தாள் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தேன் " அப்பவுக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி வந்திருக்கு நாளைக்கு எல்லோரும் போறோம் நீங்க ஊருக்கு வந்த கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும் அண்ணா" என்றாள் அண்ணாவா? கோபுரமாய் எழுந்து நின்ற என் காதல் சாம்ராஜ்யம் ஒரு நொடியில் வெடித்து சிதறிப் போனது " அப்போ நீ என்னைக் காதலிக்கவில்லையா?" ஐயோ அண்ணா நீங்கள் என்னை தப்பா புரிஞ்சிருக்கிரிங்க நான் அந்த அர்த்தத்தில உங்களோட ......... .." அதற்க்கு மேல் அவள் பேச்சைக் கேட்பதற்கு நான் அங்கு இருக்கவில்லை அண்ணா என்ற ஒரு சொல்லில் என் இதயத்தை வேரோடு வெட்டி எறிந்துவிட்டு சென்றுவிட்டாள்மீண்டும் பூட்டிக்கொண்டது என் மனக் கதவுகளோடு என் ஜன்னல் கதவுகளும்.
மீண்டும் ஆரம்பமானது என் பழைய வாழ்க்கை மீண்டும் அம்மாவின் அதே சுப்ரபாதம் ....... எருமை மாட்டின் மீது பெய்யும் மழை போலவே வீனற்றுப் போயின , சுரணை அற்றுப் போயிருந்தது மனத்தோடு உடலும் , புரண்டு புரண்டு படுத்தும் துக்கம் வரவில்லை மணி முற்பகலை தாண்டி இருந்தது தெருவில் ஏதேதோ சத்தங்கள் ஜன்னலை திறந்தேன் எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு மின்னல் .
read more...