ஆரம்பமே உங்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் எனக்குப் பிடித்த கவிஞ்சர்களில் ஒருவரான தபு சங்கர் கவிதைகளுடன் ஆரம்பிக்கிறேன்...
உன் குதிக்காலை
மையமாக வைத்து
ஒரு சுற்று சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும்
அழகு வட்டத்தில்
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்....!
உன்னை
காதலித்துக்கொண்டிருக்கும்போது
நான் இறந்து போவேனா
என்பது தெரியாது
ஆனால்
நான் இறக்கும் போதும்
உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும் !
***************************
என் வீடு
எனக்கு பிடித்திருக்கிறது
எதிர் வீட்டில் - நீ
இருப்பதால் !
***************************
காற்றோடு
விளையடிக்கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை
இழுத்து - நீ
இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவு தான்.....
நின்றுவிட்டது காற்று !
****************************
உன் வீட்டுத்
தோட்டத்தில் வைத்த
பச்சை ரகத் தென்னங்கன்று
வளர்ந்து மரமானதும்
செவ்விளநீர்
காய்த்ததாமே......
நீ
குளித்த நீரில்
வளர்ந்த மரம்
அப்படித் தானே
காய்க்கும் ...!
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்
2 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்: on "தபு சங்கர் கவிதைகள்."
கருத்துரையிடுக