29/5/10

என் காதல்


உன் கரங்களிற்குள்

சிறை போகத்தான்-நான்

ஆசை கொண்டேன்

ஆனால்

உன் நினைவுகளை மட்டுமே

என்னுள் சிறை

வைத்துக் கொள்ள

முடிந்தது....!



அன்றுமுதல்

இன்று வரை......

உன் நினைவுகள்

என் மனதில் இருந்து

சிறிதளவும் சிதறிப் போகாமல்

பொக்கிஷமாய் பூட்டியுள்ளேன்

என் இதயச் சிறையில் .....!



நீ

கல்லூரிக்கு வந்த

காலம் முதல்

உன்மேல் காதல் கொண்ட

நாட்களையும் - நான்

என் நினைவுகளில் இருந்து

கலைத்து விடவில்லை ....!



நீ பார்க்கும் போதெல்லாம்

நிலம் நோக்கும் - நீ

பாக்காத போதெல்லாம்

உன்னையே தொடரும்

என் விழிகள் ....!



உன்னை அணு அணுவாய்

அளவெடுத்து சிலையாய்

செதுக்கி நிறுத்தி வைத்துள்ளேன்

என் மனதில் ....!



எனக்கு உன் மீது

மட்டுமல்ல - உன்

பெயர் மீதும் காதல் தான்

உன் பெயரை

உச்சரிக்கும் போதெல்லாம்

ஆழ்கடல் அலை ஒன்று

அலை மோதும்

என் அடிமனதில் ....!



உன் உடை

உன் நடை , பேச்சு

உன் குறும்புத்தனங்கள்

மீதும் தீவிரமாய்

காதல் கொண்டவள் நான் ...!



படும் படாமலும்

தொட்டும் தொடாமலும் போன

உன் ஸ்பரிசங்கள்

என்றும் எனக்கு

காஷ்மீர் குளிர்மை தான் .....!



என் விடியல்கள்

ஒவ்வொன்றும்

உனக்காகவே விடிந்தன

உன்னை பார்ப்பதற்காகவே

விடிந்தன

உன் வருகைக்காகவே

விடிந்தன ...!



தினம் உன் வருகைக்காகவே

காத்திருக்கும் என்

விழிகளும் மனதும் - உன்

வருகைகள் ஒவ்வொன்றும்

எனக்கு வசந்தங்கள் ........!



அன்றும் இன்றும்

என் மனதில் நிரந்தரமாய்

குடியிருப்பது நீயும் உன்

நினைவுகளும் தான் ........!



என் மனத்தை

மொத்தமாய் உன்னிடம்

கொடுக்க முயன்ற போதெல்லாம்

ஏனோ என்னுள் தடுமாற்றம் ....

மறுத்து விடுவாயோ

என்றே மனதினுள்

புதைந்தே போனது

என் ஆசைகள் ....!



காதல்

உணர்த்தி வருவதல்ல

உணர்ந்து வருவது

உன்னால் என் காதலை

உணர்ந்து கொள்ளவும்

தெரியவில்லை

என்னால் உனக்கு

உணர்த்தவும் முடியவில்லை ....!



என் இதயத்தில்

உன்னை நிரப்பிக்கொள்ள

முடியாமல் - உன்

நினைவுகளை மட்டும்

சுமந்து நிற்கின்றேன்

இன்று ...........!



கடந்து சென்ற

கல்லூரிக் காலங்களை - நீ

நினைக்கையில்

தொலைந்து போன

முகங்களின்

முகவாரியில் சேர்ந்திருக்குமோ

என் முகம் .....!



என்றோ

ஓர் நாள் - நான்

உன்னில் காதல் கொண்டதை - நீ

அறிந்தால் அன்று

நீ சிந்தும் ஒரு

துளி விழி நீரில்

புனிதமாகும்

என் காதல் ........!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "என் காதல்"

பெயரில்லா சொன்னது…

உங்கள் காதல் கவிதை நன்றாகவும் உணர்வு மிக்கதாக இருக்கின்றது... உங்கள் காதலை நீங்கள் தெரிவிக்காமல் டூ லேட் ஆகிவிட்டது... நான் இரண்டு நபர்களை தான் சிந்திக்கின்றேன்.. அவர்களில் யார் உங்களை இந்த காதல் கவிதை எழுத தூண்டியவர்? அதே பெயர் குறிப்பிடா வாசகி கனடாவில் இருந்து.. :))