19/6/10

பெண்களும் சேலையும்

சமீபத்தில் ஒரு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றிருந்தேன் அங்கே என் அருகே இருந்த இருவரின் உரையாடலை கேட்ட முடிந்தது என்னால் அவர்கள் பேசிக்கொண்டது சேலை பற்றி எல்லோருமே சிக்குஜின்ஸ் சாரீயே கட்டுவதால் இவர்கள் வேறு புதிய பாசன் சேலை கட்டுவது என பேசிக்கொண்டிருந்தார்கள் , இங்கிருக்கும் பல பெண்கள் ஒரு வைபவத்திற்கு கட்டும் சேலை வேறு வைபவங்களிற்கு கட்டுவதில்லை ஒரு தடவை கட்டினால் அது பழையதாகி விடும் அடுத்த வைபவங்களிற்கு புதிதாக வாங்கிக் கொள்வார்கள் , ஒரு மாதத்தில் நான்கு வைபவம் வந்து விட்டால் கணவர்களின் நிலைதான் என்ன? நல்லகாலம் இவர்கள் சேலைக்கு பொருத்தமாக போலி நகைகளை அணிகின்றார்கள் அதுவே பொருத்தமாக தங்க நகைகள் தான் அணிய நேர்ந்திருந்தால் புலம்பெயர் நாடுகளில் நிறைய தமிழ் பிச்சைக்காரர்களை கண்டிருக்க கூடும்

இதில் நகைச்சுவை என்ன என்றால் பல பெண்களுக்கு சேலை கட்டவே தெரியாது வேறு ஒருவர் தான் கட்டி விட வேண்டும் , வேறு ஒருவர் சேலை கட்டிவிட அவர்கள் கட்டும் பந்தா இருக்கிறதே .... அட அட ....

நான் வைபவங்களிற்கு சேலை கட்டிச் சென்றால் சிலர் கேட்பதுண்டு சேலை நீங்கள் தான் கட்டிநிங்களா? உங்களுக்கு கட்ட தெரியுமா? என்று நானும் எங்கே எனக்கு சேலை கட்டவே தெரியாது என்று நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் பெரிதாக தலை ஆட்டிக் கொள்வதுண்டு பிறகு எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும் பொது அவர்களுக்கு சேலை கட்டிவிடக் கேட்டும் பொது தான் விளங்கும் ஆஹா இவர்கள் அவர்களுக்கு கட்டி விடுவதற்க தான் இப்படி கேட்டார்களா என்று இப்ப எல்லாம் யாராவது சேலை கட்ட தெரியுமா என்றால் இல்லை என்றே சொல்லிவிடுவது ...

இந்த சேலை பற்றி பேசும் போது பழைய சம்பவம் ஒன்று நினைவு வருகிறது
சுமார் 10 வருடங்களின் முன்பு எங்கள் உறவுக்காரர் ஒருவருக்கு திருமணம் அதற்கு நாங்கள் வெளிக்கிடும் போது பெரியம்மாவிற்கு சேலை கட்ட உதவி செய்தது என் தங்கை எதோ இருவரும் முட்டி மோதி சேலை கட்டிக் கொண்டார்கள்.. சேலை கட்டி முடிந்ததும் பெய்யம்மா சொன்னார் " என்னடி சேலை சின்னதா இருக்கு" என்று அதற்கு என் தங்கை " உங்களுக்கு இரண்டு சேலையை சேர்த்து கட்டினாலும் சின்னதா தான் இருக்கும் " என்றால் பெரியம்மா சற்று உடல்பருமன் ஆனவர்.பெரியம்மாவோ அந்த சேலையுடன் நடக்கவே சிரமப்பட்டார். ஒருவாறு வைபவம் முடிந்து சேலை மாற்றும் போது தான் அவதானித்தார் ஒரு தடைவை சுற்ற வேண்டிய சேலையை இரண்டு தடைவை சுற்றி வைத்திருந்தாள் என் தங்கை ... அதன் பின்பு அவர்கள் என் தங்கையை உதவிக்கு அழைப்பதே இல்லை .......





Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 கருத்துகள்: on "பெண்களும் சேலையும்"

அண்ணாமலையான் சொன்னது…

ஒரே சிரிப்பா இருக்கு... தொடருங்க...

பனித்துளி சங்கர் சொன்னது…

யார் எது கேட்டாலும் தலையை மட்டும் ஆட்டுவதும் ஒரு வகையில் நல்லதுதான் போல . என்ன சொல்றீங்க .

ரசிக்க வைத்தது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

பெண்களும் சேலையும்.. என்ற உங்கள் அனுபவம் நிறைந்த கதை நன்றாக இருக்கின்றது அனால் இது என்னை தான் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது தெட்டத்தெளிவாகப் புரிகின்றது.. அன்றிலிருந்து இன்று வரைக்கும் நான் யாருக்கும் சேலை கட்டிவிடவில்லை... :(

அதுமட்டும் அல்ல நீங்கள் பெரியம்மா என்பதை பெய்யம்மா என்று எழுதிவிட்டீர்கள் நல்ல காலம் பேய் யம்மா என்று எழுதவில்லை.. சிலர் மனசு புண்படும்படியாகிவிட்டிருக்கும்.. எழுத்துக்களை சரி பார்த்துவிட்டு பதியுங்கள் உங்கள் வலைபின்னலுக்கு...

tamil blog சொன்னது…

vist my blog & follow me plshttp://thenral2010.blogspot.com